யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு 35 கிலோ கஞ்சாவினை கடத்த முயன்ற மூவரை கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து பூநகரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பட்டா ரக வாகனத்தில் இன்று (18) அதிகாலை சுமார் 35 கிலோ கிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டோவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது புத்தளம் பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 18 கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here