மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவுடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பிரேரணையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திடமிருந்த மூன்றில் இரண்டு வாக்குப்பலம் தற்போது இல்லாமல் போயுள்ளதனால், இப்பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தால், இலகுவாக நிறைவேற்றலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.