நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கும் விஜயம் செய்தார்.

பிரதமரின் இவ்விஜயத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதித் தலைவர் ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக ஹட்டனுக்குச் சென்றிருந்த பிரதமர், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளை மாற்றியமைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here