இலங்கையில் ஓட்டுநர் அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கான போட்டிப் பரீட்சை டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த விடயத்தினை விரைந்து அமுலாக்கத் தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த புதிய முறை மே மாதம் முதல் அமுலாக்கப்படவுள்ளதுடன் பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடனேயே இந்த புதிய முறையை அறிமுகம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இந்த முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றலாம் என்றும் முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.