மட்டக்களப்பில், காணாமல் போனதாக செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல் போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது தங்கவேல் ஜெயராஜ் எனும் 49 வயது குடும்பஸ்தரின் சடலமே, மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here