நீட் தேர்வு முறை, இலங்கையிலும் நடைமுறையில் இருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை அருகேவுள்ள சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில் சுமூகத் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசுடன், மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசு தமிழக அரசிற்கு பக்க பலமாக இருக்கும்
நீட் தேர்வு முறை, இலங்கையிலும் நடைமுறையில் இருக்கின்றது. மேலும், இலங்கை – தமிழக பாடத்திட்டங்களில் பரிமாற்றங்களை செய்துகொள்வது தொடர்பாக மாநில கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகமான போதை பொருள்கள் கடத்தப்படும் சூழ்நிலையால் தான் தமிழக மீனவர்கள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். சீனாவின் ஆதிக்கம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.