கட்டுப்பாட்டை இழந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுங்காயமடைந்த தாய் பதுளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.