காலி கடலில் விபத்துக்குள்ளான SANDETIE என்ற வெளிநாட்டு படகினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் மூலம் குறித்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பாய்மர படகின் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் கடற்படைக்கு தகவல் கிடைத்தவுடன், இலங்கை கடற்படையினர் விபத்துக்குள்ளான படகினை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் கடற்படையினரின் கப்பல் மூலம் அந்த படகு மற்றும் படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here