நாட்டில் நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சற்றுமுன் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் வைத்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும்  என மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டானது இன்று முதல் அமுலாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தெரிவிக்கப்பட்டுள்ள நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here