தென்மாகாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தரின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here