வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு பணம் அனுப்பி வைத்தல் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

2020 மற்றும் 2021ம் நிதியாண்டுகளில் இவ்வாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கும் பணத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

PublicFinance.lk என்ற சுயாதீன ஆய்வு இணைய தளத்தின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகை 22.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் சுமார் 1612 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here