ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பிரதான கூட்டணி கட்சி என்பதுடன் அந்த கட்சி கடந்த காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகி விடலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 4 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் மறுநாள் அதாவது 5 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் காணப்படும் நெருக்கடியான நிலைமையில் இருந்து மீண்டு சரியான வழிக்கு செல்ல அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்த தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன வேறு ஒரு கதையை குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, “நாங்கள் அரசாங்கத்தில் இருந்து விலக மாட்டோம்” என நேரடியாக பதிலளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here