நாடு முழுவதும் தாதி மற்றும் சுகாதார பிரிவினர்  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் இளம் தாய் ஒருவர் எதிர்பாராத நேரத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

பசறை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இந்த இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். பிரசவ காலம் முழுமையடைவதற்கு முன்னர் நிகழ்ந்த இந்த குழந்தை பிரசவம் காரணமாக வைத்தியசாலையில் இருந்த சிறிய மருத்தவ குழுவினர் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பசறை மாவட்ட வைத்தியசாலையில் முன்கூட்டியே பிறந்த சிசுக்களுக்கு சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத காரணத்தினால் சிசுக்களின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

28 வாரங்களில் பிறந்த சிசுக்களுக்கு சிகிக்சை அளிக்கும் நடவடிக்கை சவால்மிக்கதாக மாறியுள்ளது. இது எதிர்பாராத சம்பவமாக காணப்பட்டது.

சிசுக்களுக்கு மூச்சு எடுக்க சிரம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு உடனடியாக தனது சொந்த வாகனத்தில் சென்று குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

தற்போது தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  மருத்துவரின் மனமாற்றத்தால் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளமை குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here