ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கிலோ மற்றும் 579 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 51வயதானவர் என்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பேலியகொட குற்றத்தடுப்பு காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் வத்தளை காவல்துறையில் விசாரணைக்காக கையளிக்கப்பட்டுள்ளார்.