வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை புகையிரதமொன்று தடம் புரண்டதன் காரணமாக நாட்டின் பிரதான புகையிரத பாதையின் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வட்டவளை வரை மட்டுமே புகையிரதங்கள் இயக்கப்படும் என்றும், பேருந்துகள் மூலம் பயணிகளை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடம் புரண்ட புகையிரதம் ஏனைய புகையிரதங்களின் இயக்கத்திற்கு இடையூறாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அதை அகற்றி மீட்டெடுக்கும் வரை சிறிது தாமதம் ஏற்படும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.