டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களிடம் பணம் மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் தொழில் வழங்குதாக கூறி சந்தேக நபர், பல்வேறு நபர்களிடம் 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குற்ற செயல்களுக்கு அந்த நபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here