தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது சிரிப்பாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய கூறுவதை கேட்டு சிரிப்பு வருகிறது.

ஒரு உதாரணம், பங்களாதேஷிடம் கடன் வாங்கிவிட்டு, தற்போது திருப்பி செலுத்தும் காலத்தை கெஞ்சி நீடித்து விட்டு, கடனே வாங்கவில்லை என்கிறார்.

இதையும் நாம் ‘கடனே’ என கேட்டு தொலைக்க வேண்டியிருக்கிறது. இவரது அண்ணன் ராஜபக்ஷ கடன் வாங்கி, நாட்டுக்கு பிரயோஜனமற்ற திட்டங்களில் போட்டு, நாசமாக்கினார்.

அந்த பெருங்கடனைத்தான் இன்று முழு நாடும் வட்டி, குட்டி என இப்போ கட்டி தொலைத்து கொண்டிருக்கிறோம்.

இதில், நான் கடன் வாங்கவே இல்லை என வாக்கு மூலம் வேறு…!’ என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here