முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக ரிசாத் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ரிசாத்தின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமி தீப்பரவலுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐந்தாவது பிரதிவாதியாக ரிசாத் பதியூதீன் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here