கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க  நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் இந்த திடீர்  சோதனையில் 32 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வவுனியா- கோவில்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அரிசி மற்றும் கோதுமை மாவை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here