வடக்கு – கிழக்கில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே, எனவே பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்.

இதன்போது வீதிச்சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பல கேள்விகளைக் கேட்பர்.

எனவே, அற்கான ஒத்துழைப்பைப் பொலிஸாருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு, கிழக்கு மக்களைக் கோருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here