கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடைந்து 3 மாதங்களுக்கும் அதிக காலம் கடந்த நிலையில், பரீட்சை கடமை கொடுப்பனவை கல்வி அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பரீட்சை கடமைகள் மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபட்டவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட பணிக்குழாமை சேர்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோரின் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here