மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய வாகனங்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

சனிக்கிழமை (12) காலை மட்டக்களப்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் பொலிஸார் அதிகமான இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

அதிகளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here