இலங்கையில் 23 நாட்களில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கோவிட் தொற்று இலங்கையில் கண்டறியப்பட்டது முதல் பதிவான மரணங்கள் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களை ஆராயும் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முதல் 500 மரணங்கள் பதிவாவதற்கு சுமார் 343 நாட்கள் கடந்துள்ளதுடன் இரண்டாவது 500 மரணங்கள் பதிவாவதற்கு 72 நாட்கள் கடந்துள்ளன.

1001 முதல் 1500 வரையிலான கோவிட் மரணங்கள் பதிவாவதற்கு 13 நாட்கள் மட்டும் கடந்துள்ள நிலையில், 1500 முதல் 2000 வரையிலான கோவிட் மரணங்கள் பதிவாதற்கு வெறும் 10 நாட்களே கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்பொழுது நாட்டில் பல்வேறு கோவிட் புதிய திரிபுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளை பூரணமாக பின்பற்ற வேண்டுமென சுகாதாரத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here