யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன்புறுத்தப்படுவதை காணொலிப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்தே குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here