ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


இன்னொரு காலிறுதிப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்குகளில் ரபேல் நடால், வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.


மற்றொரு காலிறுதிப் போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் மெட்டியோ பெரிட்டினிiயு எதிர்கொண்டார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 6-3, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்குகளில் ஜோகோவிச், வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

இப்போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் மரியா சக்கரி, வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், செக் குடியரசின் பார்போரா கிரெச்கோவா, அமெரிக்காவின் கோகோ கோஃப்புடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பான இப்போட்டியில், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் பார்போரா கிரெச்கோவா, வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here