யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

யாழ். நெடுந்தீவு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருக்கு போராடிய நிலையில் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது இன்று (22.04.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் ஐவர் சடலமாக மீட்பு! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இருப்பதாக தகவல் (Video) | Rescue Of Four Bodies In Nedund Island Jaffna

சடலம் மீட்பு

மேலும், ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான வகையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here