ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியரினால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளரிடம் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கடந்த டிசெம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், டிசம்பர் 26ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மசாஜ் செய்த நபர் தனது மகளை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அமெரிக்கா வந்த போது மசாஜ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மகள் கூறியதாகவும், இதற்கமையவே தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here