சிலாபத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி கடல்சார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சுற்றுலாவுக்காகச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற 23 வயதுடைய மாணவரே காணாமல் போயுள்ளார்.

சிலாபம் விடுதி ஒன்றுக்கு அருகிலுள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன மாணவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மீனவர்களின் உதவியுடன் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கன பிரதேசத்திலிருந்து சுற்றுலாவுக்காகச் சென்ற மாணவர்கள் குழு சிலாபத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here