நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய பருப்பு 10 ரூபாவாலும், வெள்ளை அரிசி 5 ரூபாவாலும், சிவப்பு அரிசி 5 ரூபாவாலும், வெள்ளை நாட்டு அரிசி 4 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பருப்பு 305 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை அரிசி 179 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 164 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here