தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி மற்றும் இளைஞனின் உடல்களை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா விடுதியில் தொழில் புரிந்து வந்த இளைஞன்

சுற்றுலா விடுதியில் இளைஞனும் யுவதியும் தற்கொலை | Young Man And Young Woman Committed Suicide

இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதே சுற்றுலா விடுதியில் தொழில் புரிந்து வந்த இளைஞனும், அம்பலாந்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இளைஞன் சிறு வயது முதல் குறித்த சுற்றுலா விடுதியில் வளர்ந்து வந்துள்ளதுடன் பின்னர் விடுதியை நிர்வகித்து வந்துள்ளார்.

யுவதியை நேற்றிரவு விடுதிக்கு அழைத்து வந்த இளைஞன்

சுற்றுலா விடுதியில் இளைஞனும் யுவதியும் தற்கொலை | Young Man And Young Woman Committed Suicide

இந்த இளைஞன் நேற்றிரவு அம்பலாந்தொட்டை பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று உயிரிழந்துள்ள யுவதியை விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் இவர்கள் இருவரும் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here