மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (22.01.2023) இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து இன்று காலை 6.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த காலு குமாரி தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கான காரணம்

கவனக்குறைவால் மற்றொரு உயிர் பலி:மாத்தறையில் சம்பவம் | Train Accident In Mataraஇந்த விபத்தில், தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான முச்சக்கரவண்டியின் சாரதி தம்மிக்க தேசப்பிரிய என்பவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 22 வயதான கிரிஷான் மதுசங்க என்பவர் காயமடைந்துள்ளார்.

தொடருந்து சமிக்ஞை ஒளிரும் போது முச்சக்கரவண்டி கவனக்குறைவாக தொடருந்து பாதையை கடந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here