நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் – வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. .

இதற்கமைய நேற்று (சனிக்கிழமை) ஹட்டன் – டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பள்ளிவாசலில் சடலங்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் அட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி அஞ்சலியில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here