கொழும்பை சுற்றிவளைத்து இன்று முதல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி கொழும்பில் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டமானது பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கை செலவினங்கள், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு! நகரிற்குள் பிரவேசிக்குமாறு மக்களுக்கு அழைப்பு | Colombo Protest In Sri Lanka

இந்த நிலையில் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்து குறித்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here