அனுராதபுரம் வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றிய 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றி அதனை புதைப்பதற்கு சென்ற துப்புரவு நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் 28 பேர் திடீரென சுகயீனமடைந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பணிப்பெண்கள் குழி வெட்டி புதைப்பதற்கு தயாரான போது அவர்கள் திடீரென 28 பேரும் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கழிவுகளில் இருந்து ஏதேனும் நச்சு பொருட்களை சுவாசித்தமையினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதா என தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here