எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தது.

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Laugfs Gas Price In Sri Lanka

இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை இந்த மாதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலைகள்

அத்துடன் 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு கொள்கலன்களின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எடை கொண்ட கொள்கலன்களின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Laugfs Gas Price In Sri Lanka

இந்த சூழ்நிலையிலேயே லாஃப் எரிவாயு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு

இதேவேளை லிட்ரோ எரிவாயுவின் விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறைக்கப்பட்டிருந்தது.

விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Laugfs Gas Price In Sri Lanka

இவற்றின் அடிப்படையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4551 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1827 ரூபா என்பதுடன், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 848 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here