ஹிக்கடுவ பிரதேசத்தில் கைத்துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ வராவிலவத்த என்னும் பிரதேசத்தில் இந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைத்துப்பாக்கி ஒன்று, 2200 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆறு இலட்சம் ரூபா பணம் என்பன குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
ஹிக்கடுவ வராவில பகுதியைச் சேர்ந்த 32 வயதான சுற்றுலாத்துறை தொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்பய்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் மேலும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.