காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம் என மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்த லுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அதே நேரம் மக்களுடைய நிலைப்பாட்டையும் உயர் மட்டத்துக்கு வெளிப்படுத்துதோடு காற்றாலை விடயத்தில் நாங்கள் மக்களுடன் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here