இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று (சனிக்கிழமை) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here