மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இடது கையில் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.