பாணந்துறை அலோபோமுல்ல மஹபெல்லான சந்தியில் ஐஸ் போதைப்பொருளுடன் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபருடன் 6450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர் மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலக உறுப்பினரான ‘அப்பா’வின் சீடன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், சந்தேகநபர் மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here