நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த 1 ஆம் திகதி நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன  மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக  தேடும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மாகாவலி ஆற்றின் கம்பளை – மொரகலை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here