யாழ்ப்பாணம் – காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்ற ரசலிங்கம் பொன்னம்பலம் என்பவரின் வீட்டுக்கு இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை எரிபொருள் நிரப்ப வந்த இரு இளைஞர்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , பணியாளர்களுக்கு வாளினை காட்டி மிரட்டியும் உள்ளனர்.

 

சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெறும் போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த உரிமையாளரின் உறவினரின் வீட்டினுள் இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளது.

வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here