யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் ஜயனார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நகை, பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது 10 பவுண் நகையும், இலங்கை மற்றும் வெளிநாட்டு பணங்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

வீட்டில் கணவன் மற்றும் மனைவி வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர், வீட்டின் பின்பக்க யன்னலை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அலுமாரியினுள் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்கள் அந்த வீட்டில் தங்கிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here