வன்னி பிராந்தியத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட ஒன்றுகூடல் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வவுனியா அமைதியம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

குறித்த ஒன்று கூடலில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம் பெறும் காணி அபகரிப்பு,காற்றாலை மின் செயற்திட்டம் ,சட்டவிரோத மணல் அகழ்வு, பெளத்த மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதே நேரம் குறித்த ஒன்று கூடலில் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்கள் தயார்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான தெளிவு படுத்தலும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள்,மெசிடோ நிறுவன அதிகாரிகள்,ஊடகவியளாலர்கள் ,ட்ரான்ஸ்பெரன்ஸி இன்ர நேஷனல் வடமாகாண இணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here