எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கானும் நோக்கில் முச்சக்கரவண்டிகளை பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்து பதிவு ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உவர்மலை,மட்கோ,லிங்கனகர் மற்றும் அபயபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகளது வாகணங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று காலை திருகோணமலை தலைமயக பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்
முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் தமது வாகணங்களை முண்கூட்டியே பதிவு செய்து தமது ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கு எதிர்வரும் நாாட்களில் தொடர்ச்சியாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபடும் என பொலிஸார் தெரிவித்தனர்.