மத்துகமை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில், மத்துகமை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மத்துகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலகை ஒன்றினால் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இராணுவத்தினரை பயன்படுத்தி ஏற்பட்ட பதற்றத்தை தணித்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.