இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், தற்போதைய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என்ற பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தொடர்பான விசாரணை இன்று நாடாளுமன்ற கோப் குழுவின் முன் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தொடர்பான விசாரணைக்கு, சம்பந்தப்பட்டவர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக, குழுக் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் அமைப்பின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய விலை தொடர்பில் சர்ச்சை
கடந்த கோப் கூட்டத்தின் போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த தனிப்பட்ட கருத்து காரணமாக பெட்ரோலிய விலை தொடர்பில் நாட்டில் சர்ச்சை தோன்றியது.
இந்தநிலையில் தற்போதைய நிலைமை சுமூகமானவுடன் மீண்டும் குழுக் கூட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என கோப் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.