திருகோணமலை – மொறவெவ பிரதேச மக்களுக்கு கூப்பன் மூலம் பெட்ரோல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கான அறிவுறுத்தல்

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன உரிம பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 2500 ரூபாவுக்கும் மற்றும் கார்களுக்கு 5000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் மொரவெவ பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அறிவிப்பை தொடர்ந்து எரிபொருள் கூப்பனை பெற்று கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here