திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வண்டியிலிருந்து மக்கள் எரிபொருள் சேகரித்துள்ளனர்.

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து இன்று காலை 11 மணியளவில் ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றி சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

விபத்து எரிபொருள் கொள்கலன் வண்டி 33,000 லீற்றர் எரிபொருளை ஏற்றி செல்லும் போது ஹப்புத்தளை – பங்கெட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதி வழுக்கியமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சேகரிப்பு விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலனிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here