மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

கைதானவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேர் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சுற்றிவளைத்த கடற்படையினர்; சிக்கிய 77 பேர்! | Encircled Marines77 People Trapped

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here